ராதிகா குமாரசாமி, ரமேஷ் அரவிந்த் ,ஸ்ரீ ஜெய் கூட்டணியில் உருவான “பைர தேவி” !
பிரபல கன்னட நடிகையும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரின் மனைவியான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா அகோரியாக நடித்து மிரட்டி இருக்கும் படம் பைர தேவி.இப்படத்தின் டீசரை குட்டி ராதிகாவின் பிறந்த நாளில் படக்குழு வெளியிட்டுள்ளது
இந்த டீசரின் மூலம் ஒரு பெண் அகோரியாக ராதிகா குமாரசாமியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.டீசர் ஆரம்பத்தில் பல அகோரிகளுடன் ராதிகா ஒரு பிணத்தில் மேல் அமர்ந்து பூஜை செய்யும் காட்சி மிரளவைக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ஒரு தீய கூட்டத்தினரிடம் இருந்து ராதிகா ஒரு பெண்ணைக் காப்பாற்றும் காட்சி மிரட்டும்படி உள்ளது. ஒரு பெண் அகோரியாக ராதிகா நடித்துள்ள ஒவ்வொரு காட்சியும் புல்லரிக்கும் விதமாக உள்ளது. இந்தியாவின் முதல் பெண் அகோரி திரைப்படமான இப்படத்தில் சீனியர் நடிகர் ரமேஷ் அரவிந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
ஒருபுறம் நடிகையாக இப்படத்தில் நடித்துள்ள ராதிகா குமார சாமி மறுபுறம் இப்படத்தை தயாரித்துள்ளார்.ஸ்ரீ ஜெய் இப்படத்திற்கு கதை ,திரைக்கதை, வசனங்களை அமைத்து இயக்கியுள்ளார்.ரவிராஜ் மற்றும் யாதவ் ஆகியோர் இப்படத்தின் நிர்வாக பணிகளை கவனித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் ரங்கையனா ரகு, ரவிசங்கர், ஸ்கந்தா அசோக் ,அனு முகர்ஜி,மாளவிகா அவினாஷ் ,சுசீந்திரா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜே எஸ் வாலி இப்படத்தின் கேமரா பணிகளை செய்துள்ளார் .கே கே செந்தில் பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு சி ரவிச்சந்திரன் தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
தெலுங்கு பாடல்களை ராமா ஜோகையா சாஸ்திரி மற்றும் ஸ்ரீ ஜெய் எழுத, தமிழ் பாடல் வரிகளை தாமரை மற்றும் ஸ்ரீ ஜெய் எழுதியுள்ளனர்.பைரவி திரைப்படம் இந்தியாவில் முக்கிய பகுதிகளான வாரணாசி, காசி ,ஹரித்வார், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.