திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது அதிரடி நடவடிக்கை! டிஜிபிக்கு தேசிய மகளீர் ஆணையம் உத்தரவு!!
லியோ” படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், திரிஷா குறித்து மிகவும் சர்ச்சையான கருத்துகளைக் கூறினார். மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, “இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன்” என்றும் கூறியிருந்தார்.இவ்விவகாரத்தில் திரிஷாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகனன், கார்த்திக் சுப்பராஜ், குஷ்பு உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.நடிகர் சங்கமும் இவ்விவகாரத்தில்,மன்சூர் அலிகானுக்கு ‘உங்களை ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கக்கூடாது’ என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவ்விவகாரம் குறித்து நடிகை குஷ்பு “தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நான் ஏற்கனவே மன்சூர் அலிகான் பேசிய கருத்துகள் குறித்து ஆணையத்தின் மூத்த உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளேன்.அவரின் மீது மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். இதுபோன்ற இழிவான சிந்தனையுடன் உள்ள யாரும் தப்பிக்க முடியாது. இந்த நேரத்தில் மன்சூர் அலிகான் இழிவாகப் பேசிய நடிகை திரிஷா மற்றும் மற்ற பெண்களுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன்.மேலும் பெண்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு கண்ணியம் அளிக்கவும் நாம் போராடி வருகிறோம். ஆனால் இவரைப் போன்றவர்கள் சமூகத்தில் பெண்கள் குறித்து இழிவான கருத்துகளைக் கூறி வருகின்றனர் என காட்டமாக பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில்,மத்திய தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து மன்சூர் அலிகான் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது .இது குறித்து மகளீர் ஆணையம் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது,”நடிகை திரிஷாவை பற்றி நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் தானாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களைப் பயன்படுத்துமாறு டிஜிபிக்கு உத்தரவிடுகிறோம். இது போன்ற கருத்துக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக்குகிறது மற்றும் கண்டிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் மன்சூர் அலிகான் மீதான தேசிய மகளிர் ஆணையத்தின் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The National Commission for Women is deeply concerned about the derogatory remarks made by actor Mansoor Ali Khan towards actress Trisha Krishna. We’re taking suo motu in this matter directing the DGP to invoke IPC Section 509 B and other relevant laws.Such remarks normalize…
— NCW (@NCWIndia) November 20, 2023