ஆடு சிக்கிடுச்சு டோய்….விஜய்யை கலாய்க்கும் ரஜினி ரசிகர்கள்!

‘லியோ’ படத்தைத் தொடர்ந்து  நடிகர் விஜய் தற்போது,வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தனது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டிலை படக்குழு இன்னமும் அறிவிக்காத நிலையில், இதுதான் டைட்டில் என ஒவ்வொரு தலைப்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி அது ட்ரோல் மெட்டீரியலாகவும் மாறி வருகிறது.

இந்நிலையில், தற்போது லேட்டஸ்டாக வந்துள்ள தலைப்பு g.o.a.t . (ஜி,ஓ ஏ டி ) .முதலில் பாஸ் என்றும், பஸில் என்றும் தளபதி 68 படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டதாக தகவல்கள் தீயாக பரவிய நிலையில், அந்த இரண்டு தலைப்பும் இல்லை என அர்ச்சனா கல்பாத்தி அமைதியாக இல்லாமல் வாலன்டியராக வந்து விளக்கம் கொடுத்திருந்தார்.

தற்போது கோட் (ஆடு ) தலைப்புக்கு அவர் எதுவும் மறுப்பு தெரிவிக்காத நிலையில், ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.இப்படத்தின் தலைப்பை பார்த்த ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள், ஆடு சிக்கிடுச்சு டோய்…. என ஏகப்பட்ட ட்ரோல்களையும் மீம்களையும் போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

இதையடுத்து மீண்டும் சமூக வலைதளங்களில் ரஜினி-விஜய் ரசிகர்களின் மோதல் களை கட்ட தொடங்கியுள்ளது.,இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு இவ்வருட இறுதியில் வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.