‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’ !

அக்ஷயா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராஜன் தயாரித்துள்ள புதிய படம்,’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ .எரும சாணி ரமேஷ் வெங்கட் இயக்கத்தில்,காமெடி, ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில், பிரபல யூட்யூபர்கள் ‘எரும சாணி’ விஜய்,ஹரிஜா யாஷிகா ஆனந்த், கார்த்திக், ரித்விகா,முனீஸ்காந்த்,’பரிதாபங்கள்’ கோபி சுதாகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஜோஸுவா ஜெ பெரோஸ் கவனிக்க,கவுசிக் கிரீஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தை இயக்கியுள்ள ‘எரும சாணி’ ரமேஷ் வெங்கட் கூறுகையில்,” ஒரே இரவில் திரையரங்கில் நடக்கும் கதை.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருக்கிறோம். பலான படம் ஒன்றை பார்க்கும் ஆசையில், ஒரு இரவில் ஒரு திரையரங்குக்கு செல்லும் 13 பேர் அந்த தியேட்டரில் இருக்கும் 4 பேய்களின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களால் அந்த திரையரங்கை விட்டு வெளியேற முடியவில்லை. இதையடுத்து அங்கு என்ன நடக்கிறது ,அந்த 13 பேரும் அந்த நான்கு பேய்களிடம் இருந்து உயிருடன் தியேட்டரை விட்டு வெளியேறினார்களா, இல்லையா, அந்த 13 பேர் யார்? அவர்களுக்கும் அங்கு உள்ள பேய்க்கும் என்ன தொடர்பு? இதை ‘பக்கா காமெடி ஹாரர்’ கலந்த திரில்லராக உருவாக்கி உள்ளோம்.

இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் ஈசிஆர் மற்றும் சென்னை ஓட்டேரியில் உள்ள இரண்டு திரையரங்குகளில் நடத்தியுள்ளோம். இப்படத்தில் யாரும் ஹீரோ, ஹீரோயின் என கிடையாது இது சென்னை 28 படம் மாதிரி எல்லோருக்கும் சமமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு 2 மணி நேரம் நேரம் போவதே தெரியாத அளவுக்கு எல்லா தரப்பினரும் ரசித்து பார்க்கும்வகையில் இப்படம் உருவாகியுள்ளது இப்படம் வரும் 29-ம் தேதி வெளியாக உள்ளது என்கிறார்.