விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை தீவுத்திடலில் வைக்கப்படும்! தேமுதிக அறிவிப்பு!!
பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக விஜயகாந்த் உடல் நாளை தீவுத்திடலில் வைக்கப்படுகிறது என தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் இன்று (28.12.2023) காலை 6.10 மணியளவில் காலமானார்.
அவரது உடல் தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலை மோதுவதால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ,
சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை 29.12.2023 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது.இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.