எம்ஜிஆர், சிவாஜியை உச்ச நட்சத்திரங்களாய் மாற்றியவர் கருணாநிதி.! கமல்ஹாசன் பேச்சு!!

 

முன்னாள் முதல்வர மறைந்த கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சென்னையில் நடந்தது இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: “முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இருக்கும் மேடையில் நான் எப்போதும் ஓரமாக தான் இருப்பேன். அதனால் தான் நடு மேடையில் நிற்காமல் தொகுப்பாளர் பேசும் இடத்தில் இருக்கிறேன். மேலும், என் நெருங்கிய நண்பர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கை சிறப்பான முறையில் நடத்தி தந்த முதலமைச்சருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். கலைஞரின் இந்த பண்பு முதலமைச்சர் ஸ்டாலினிடம் உள்ளது.அவருடைய இந்த பண்பு கலைஞரிடமிருந்து வந்தது. என்னுடைய தமிழ் ஆசான்கள் மூன்று பேர். கருணாநிதி, எம்ஜிஆர், சிவாஜி. சினிமாவில் இருக்கும்போதே அரசியலையும் அரசியலில் இருக்கும்போது சினிமாவையும் கலைஞர் தூக்கிப் பிடித்ததை என்றென்றும் மறவோம். கலைஞர் தன்னையும் வளர்த்தார். தமிழையும் வளர்த்தார். தமிழ்நாட்டையும் வளர்த்தார். பாடல்களில் சிக்கிக்கொண்டிருந்த சினிமாவை கனல் தெறிக்கும் வசனங்களின் மையமாக மாற்றினார் கலைஞர். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்களைத் தனது எழுத்து வன்மையால் உச்சநட்சத்திரமாக மாற்றினார் கலைஞர். அமெரிக்க இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கனுக்கு பிடித்த வசனகர்த்தா கலைஞர்தான். கலைஞர்தான் நவீன சினிமாவின் வசன சிற்பி என்றால் மிகை ஆகாது. ‘நேருவின் மகளே வருக… நிலையான ஆட்சி தருக!’ எனச் சொல்லக்கூடிய துணிச்சல் அவருக்குதான் இருந்தது.அவரை நவீன தமிழ் சினிமாவின் வசன சிற்பி என்று சொன்னால் மிகை ஆகாது. சிறு வயதில் என் அக்காவிடம் கருணாநிதி போன்று முடி வைத்துத் விடுங்கள் என்று சொல்லுவேன். எனக்கு அவர் எனக்கு சூட்டிய கலைஞானி என்ற பட்டத்தை என்றும் மறவேன். தமிழ் சினிமாவின் மக்களுடன் உறவாடும் வாய்ப்பை என்றும் அவர் விடவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது எதையும் விடக்கூடாது என்பது நான் அவரிடம் இருந்து கற்று கொண்ட பாடம். அவர் கற்றுக்கொடுத்த பாடத்தை நான் எஎன்னுடைய வாழ்க்கையில் என்றும் பின்பற்றுவேன்” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.