கமல்ஹாசனின் 237 வது பட அறிவிப்பு வெளியானது!

’இந்தியன் 2’ மற்றும் ’கல்கி 2898’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள கமல்ஹாசன், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தக்ஃலைப்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த சில நாட்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில்,தற்போது கமல்ஹாசனின் 237 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பல வெற்றி திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணிபுரிந்த அன்பறிவ் மாஸ்டர்கள் கமல்ஹாசனின் 237 வது படத்தை இயக்குகிறார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இது குறித்த வீடியோவை கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.