நடிகர் சங்க அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் விழா!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரம், தமிழகத்தின் முன்னாள் ,முதல்வருமான மறைந்த எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு தி.நகர், அபிபுல்லா சாலையில் அமைந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு இன்று (17.01.2024) காலை 10 மணியளவில் நடிகர் சங்க தலைவர் நாசர், செயற்குழு உறுப்பினர்கள் மூத்த நடிகைகள் லதா சேதுபதி,சச்சு மற்றும் தளபதி தினேஷ்,பிரகாஷ், சவுந்தரராஜா அனந்தநாராயணன் மற்றும் சங்க மேலாளர் ஏ தர்மராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

பின்னர் நடிகர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“தென்னிந்திய நடிகர் சங்கத்தினுடைய மிக மிக முக்கியமான அஸ்திவாரம் அய்யா மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள். அவருடைய ஆசியில் வெகு சீக்கீரம் இந்த நடிகர் சங்க கட்டிடத்தை அவர்கள் நினைவஞ்சலியாக கட்டி எல்லோருடைய பசியை போக்கணும் என்பதே என்னுடைய, எங்களுடைய பிராத்தனை..” இவ்வாறு அவர் கூறினார்