சண்முகபாண்டியனோடு இணைந்த ராகவா லாரன்ஸ் !
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வின் போது, நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கத் தயார் என்று தெரிவித்திருந்தார். இதேபோல நடிகர் விஷாலும் இறுதி அஞ்சலியின்போது அறிவித்தார். இந்நிலையில் தற்போது இயக்குனர் அன்பு இயக்கத்தில், சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள ராகவா லாரன்ஸ் மொத்தமாக 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.