‘வெப்பம் குளிர் மழை’ .!


‘ஹேஷ்டேக் எப்டிஎப்எஸ்’ புரொடக்ஷன்ஸ் திரவ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் புதிய  படம் ‘வெப்பம் குளிர் மழை’ .

இப்படத்தின் தயாரிப்பாளரான திரவ்,  பெத்தபெருமாள் என்ற  கதையின்  சிக்கலான முதன்மை கதாபாத்திரத்தில்  நடிக்கிறார். கதாநாயகியாக, ‘அசுரன்’  ‘பொம்மை நாயகி’ மற்றும் ‘லேபிள்’ வெப் சீரிஸ் போன்ற படங்களில் நடித்துள்ள இஸ்மத் பானு   நடிக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், ‘திரி அய்யா’ என்ற ஜாலியான கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். கோபமான மாமியார் கதாபாத்திரத்தில் ரமா நடித்துள்ளார்.இவர்களுடன் மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் திருமணமான தம்பதிகள் சந்திக்கும் இன்றைய சவால்களை மையமாகக் கொண்டது மற்றும் அதில் உருவாகும் சமூக தாக்கங்கள் மன, உடல் ரீதியாக உறுதியற்ற தன்மைகளை எப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உருவாக்குகின்றன என்றும் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து கூறுகிறார்.

படத்தின் மையக்கரு மனித உணர்வுகளின் நுணுக்கங்களையும், இருப்பின் அடிப்படைத் தன்மையையும் ஆராய்வதோடு, சமீப காலங்களில் ஒரு குறிப்பிடத்தக்க சமூக நெருக்கடியாக உருவாகியுள்ள குழந்தைப் பெற்றுக் கொள்ளுதல் பற்றிய அழுத்தமான சிக்கலையும் கையாளுகிறது.  இப்படத்தின் ஒளிப்பதிவை பிருத்வி ராஜேந்திரன்,கவனிக்க, ஷங்கர் ரங்கராஜன்,இசையமைத்து வருகிறார்