இயக்குனர்,தயாரிப்பாளர் வெற்றி.துரைசாமி இவர் காரில் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு தான் இயக்கும் புதிய படத்தக்கான இடங்களை தேர்வு செய்வதற்காக சென்றுள்ளார். அந்த மாநிலத்தின் கசாங் நாளாலா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை பயணித்து கொண்டிருந்த போது,டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இன்னோவா கார்,மின்னல் வேகத்தில் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கார் ஓட்டுநரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வெற்றியுடன் சுற்றுலாவுக்குச் சென்றிருந்த திருப்பூரை சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்று இமாச்சலப் பிரதேச காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஆனால், ஆற்றில் விழுந்த வெற்றி துரைசாமி எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.அவர் ஆற்றில் மூழ்கி அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேச போலீசார் தமிழ்நாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க தொடர்ந்து வெற்றி துரைசாமியை தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.வெற்றி துரைசாமி ஒரு திரைப்பட இயக்குனரும் ஆவார். இவரது இயக்கத்தில்,விதார்த் – ரம்யா நம்பீசன் நடிப்பில் என்றாவது ஒருநாள் என்ற படம் கடந்த 2021-ல் வெளியானது
இந்நிலையில் தற்போது புதிதாக பெயரிடப்படாத கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது