யோகிபாபுவுடன் ஜோடி சேர்ந்த லவ்லின் சந்திரசேகர்!
டிஸ்னி, ஹாட்ஸ்டார்,பட நிறுவனம்,சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகிபாபு நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப் படத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார், லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.இப் படம் குறித்து நாயகன் யோகி பாபு கூறுகையில்..,”சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள் . அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன், அந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. வரும் காலங்களில் இவர்களது தயாரிப்பில் உருவாகும் நல்ல தையம்சமுள்ள படைப்புகளில் நான் தொடர்ந்து நடிப்பேன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்” என்கிறார். இயக்குநர் சுரேஷ் சங்கையா கூறுகையில்..,”இந்த படத்தின் திரைக்கதை அனைத்து பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில், அசத்தலான பொழுதுபோக்குடன், பரபரப்பான ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருக்கும். மேலும் இப்படத்தில் சமூகத்துக்குத் தேவையான அவசியமான செய்தியும் இருக்கும்” என்கிறார்.இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, வி,தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.