முதுகுத்தண்டை சிலிர்க்கச் வைக்கும் திகில் தொடர் இன்ஸ்பெக்டர் ரிஷி!

மர்மங்களால் சூழப்பட்ட சிக்கலான மற்றும் விசித்திரமான நிகழ்வுகளை எதையும் சந்தேகக் கண்களுடன் அணுகும் ரிஷி நந்தன், என்ற காவல் ஆய்வாளர் ஆராயத் தொடங்கும் போது, அவரது உறுதியான கருத்துக்களுக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ள நேரும் அவரது பயணத்தின் ஒரு அழுத்தமான கதையை “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படம் விவரிக்கிறது. மனதை நிலைக்குலையச்செய்யும் இந்த திகில் மற்றும் மர்மம் நிறைந்த வழக்கின் விசாரணையின் ஊடே, குற்றத்தின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் போதும் தனது ஆழ்மனதில் பீறிட்டு எழும் உணர்வுகளை கையாளும் போதும் இருநிலைகளிலுமே இன்ஸ்பெக்டர் ரவி அச்சமூட்டும் மாபெரும் தடைகளை எதிர்கொள்கிறார்,  

“நாடு முழுவதிலுமிருந்து வரும் வளமான, ஆழமாக வேரூன்றிய மற்றும் கலாச்சார ரீதியாக மனதை ஆழ்ந்து போகச்செய்யும் கதைகளின் வரிசையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இங்கே பிரைம் வீடியோவில், நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் பிராந்திய உள்ளடக்கத்தோடு கூடிய எங்களின் கலைத் தொகுப்பை நாங்கள் தொடர்ந்து விரிவாக்கம் செய்து கொண்டிருக்கும் வேளையில், நந்தினி ஜே.எஸ் உருவாக்கிய முதுகுத்தண்டை சிலிர்க்கச் வைத்து உறையச்செய்யும் திகில் நிறைந்த தமிழ் ஒரிஜினல் டிராமா தொடரான “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.” என்று இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார். “அமானுஷ்ய நிகழ்வுகளின் கூறுகள் நிறைந்த இந்த மனதைக் கொள்ளைகொள்ளும் கிரைம் தொடரின் புலன் விசாரணைக்கு நந்தினி வழங்கும் ஒரு தனித்துவமான பெண்ணியப் பார்வைக் கோணம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.”

“ஒரு படைப்பாளியாக, “இன்ஸ்பெக்டர் ரிஷி”  திரைப்படத்தில் பணிபுரிந்தது ஒரு ஆழ்ந்த மகிழ்ச்சிகாரமான அனுபவமாக இருந்தது மற்றும் இந்த கூட்டாண்மைக்கு  நான் மிகவும் நன்றி பாராட்டுபவனாக இருக்கிறேன். திகில் மற்றும் மர்மங்களுடன் போலீஸ் நடைமுறைகளை ஒருங்கிணைத்து வழங்கியது கதை சொல்லல் செயல்பாடுகளில் இன்ஸ்பெக்டர் ரிஷியின் அச்சமூட்டும் விந்தையான உலகத்தினுள் மேலும் ஆழமாக சென்று ஒரு புதிய பரிமாணத்தை ஆராய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.” என்று நந்தினி ஜே.எஸ்.கூறினார்  “நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள், குமரவேல் உள்ளிட்ட நடிகர்களின் உன்னதமான நடிப்பும், படக் குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகளும் எனது பார்வைக் கோணத்தை திரையில் அழகாக காட்சிப்படுத்த உதவியிருக்கிறது.”