அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டைம் டிராவல் கதையா?

 

அஜித் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் விடா முயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆஜர் பைஜான் நாட்டிலேயே தொடங்கப்பட்ட உள்ள நிலையில், அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது..இப்படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயரிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இப்படம் வரும் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது அதாவது ஆதிக்க ரவி சந்திரனின் மார்க் ஆண்டனி படத்தை போலவே இப்படமும், டைம் ட்ராவல் கதையாக் உருவாகும் என்றும்; அஜித் மூன்று காலகட்டங்களில் வரும்படி கதையை ஆதிக் ரவிச்சந்திரன் உருவாக்கியிருக்கிறார் என்கிறார்கள்.