‘பிட் புல்’ நாயை  மையப்படுத்தி ஆக்க்ஷன், கிரைம், த்ரில்லராக உருவான ‘குத்தா’!


ஆர்.விஷன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில்,இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு ,” குத்தா ”  என வித்தியமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, போஜ்புரி, சைனீஸ், ஆங்கிலம், ரஷ்யன் என பத்து மொழிகளில்  உருவாகி வருகிறது.இதில்   முன்னணி திரையுலக பிரபலங்கள்  பலர்  நடிக்கின்றனர்

இப்படம் குறித்து இயக்குனர்  வி.சி.வடிவுடையான் கூறுகையில்,”உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட மிகவும் ஆபத்தான பிட் புல் நாயை  மையப்படுத்தி ஆக்க்ஷன், கிரைம், த்ரில்லர் திரைப்படமாக இதை உருவாக்கி வருகிறோம்.நாயின் வெறித்தனமான ஆக்க்ஷன் காட்சிகள் அதிகம் இருப்பதால் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஃபைட் மாஸ்டரான ராம் லெக்ஷ்மணன் இரட்டையர்கள் இப்படத்தின் சண்டை காட்சிகளை கவனிக்கிறார்கள்.

இப்படத்தில் அரை மணிநேரம் பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறுவதால் அந்த பணியை சைனாவில் உள்ள குக்கியா கவாசி என்ற கிராபிக்ஸ்  நிறுவனம் மேற்கொள்கிறது என்கிறார்.. இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.பிரணவ் கவனிக்க,அம்ரீஷ் இசையமைத்து வருகிறார்.