நடிகர் அருள்மணி காலமானார்!.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலங்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருவது ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சமீபத்தில் தான் லொள்ளு சபா சேஷு மற்றும் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் மாராடைப்பால் உயிரிழந்தனர்.இந்நிலையில் நடிகரும் அதிமுக நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி (வயது 65) நேற்று மாலை திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் அருள்மணி அழகி, தென்றல், தாண்டவக்கோனே,சிங்கம், லிங்கா, மற்றும் தர்மசீலன் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார்