சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘குரங்கு பெடல்’!

நடிகர் சிவகார்த்திகேயன்,தனதுசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில்  நல்ல கதையம்சம் சார்ந்தப் படங்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து வருகிறார். இந்நிலையில்   இயக்குநர் கமலக்கண்ணனின் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தை தனது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்.பட நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார்.

‘தமிழ்நாட்டின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள மயக்கும் காவிரி ஆற்றின் அழகிய கரையோரங்களில் 1980 களின்  கோடைகாலத்திற்கு பார்வையாளர்களை இப்படம் கொண்டு செல்கிறது. ,

சைக்கிள் ஓட்டும் கலையில் தேர்ச்சி பெறத் துடிக்கும் மகனான மாரியப்பனுக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பை வெளிக்கொண்டு வருகிறது. ராசி அழகப்பன் எழுதிய ’சைக்கிள்’ சிறுகதையால் ஈர்க்கப்பட்ட இந்தத் திரைப்படம் குடும்ப அமைப்பு மற்றும் கனவுகள் பற்றிய ஒரு கூர்மையான ஆய்வு ஆகும்.இப்படத்தின் ஒளிப்பதிவை சுமீ பாஸ்கரன்,கவனிக்க,ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

இப்படத்தில் சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர், ரத்தீஷ் மற்றும் சாய் கணேஷ் ஆகியோர்   நடித்துள்ளனர். இவர்களுடன் திறமையான நடிகர் காளி வெங்கட் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நக்கலைட்ஸ் பிரசன்னா பாலச்சந்தர் மற்றும் ஜென்சன் திவாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.