“பைரவா “ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

bairava-1விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில்,  பரதனின் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில், இளையதளபதி விஜய் நடித்திருக்கும் “பைரவா “ படத்தின் படப்பிடிப்பு .29.11.2016 நேற்று “ பூசணிக்காய் “ உடைப்புடன் இனிதே நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் நடிகர்  விஜய் , தயாரிப்பாளர் B .வெங்கட்ராம ரெட்டி , B. பாரதி ரெட்டி , இயக்குநர் பரதன் , ஒளிப்பதிவாளர் சுகுமார்,எடிட்டர்  பிரவீன் ,கலை இயக்குனர் பிரபாகரன் தலைமை  நிர்வாகி ரவிச்சந்திரன்,முதன்மை  நிர்வாகி  குமரன்  மற்றும் படகுழுவினருடன் “ பைரவா “ திரைப்படத்தை தமிழ் நாடு முழுவதும்   வெளியிடும்  ஸ்ரீ கிரீன் புரொடக்க்ஷன்ஸ்  சரவணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் . கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ,  ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி,தம்பிராமையா ,சரத் லோகிதா  ஸ்வா , சதிஷ்,அபர்னா  வினோத் ,சிஜு ரோசலின், பாப்ரி கோஷ்,  மைம் கோபி , ஸ்ரீமன் ஆகியோர் மிக முக்கியாமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

bairava-2முதல் முறையாக   இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இளையதளபதி விஜய் படத்திற்கு  இசை  அமைத்துள்ளார்  அணைத்து  பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து  எழுதி இருக்கிறார்.

பைரவா திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் பணி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல்கள்  விரைவில் வெளிவரவுள்ளது.