‘உப்பு புளி காரம்’ பர்ஸ்ட் லுக் வெளியானது!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் ‘டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி’ தளமான டிஸ்னி, அதன் அடுத்த புதிய தொடரான  ‘உப்பு புளி காரம்’ சீரிஸின் பர்ஸ்ட் லுக்கை  வெளியிட்டுள்ளது.இத் தொடரில்  பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர்  இணைந்து நடித்துள்ளனர்.நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், அட்டகாசமான பொழுதுபோக்கு சீரிஸாக உருவாகியிருக்கும் “உப்பு புளி காரம்” சீரிஸ், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகப் பெரும் விருந்தாக அமையும் என்கிறார் இத்  தொடரை இயக்கி வரும்   எம். ரமேஷ் பாரதி.   இசையமைப்பாளர் ஷேக் இசையமைத்துள்ள இந்த தொடருக்கு பார்த்திபன் மற்றும் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.