அஸ்வின் பாபு ஹீரோவாக நடிக்கும்   ‘சிவம் பஜே’!


கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ், மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிப்பில், அப்சர் இயக்கத்தில் அஸ்வின் பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படத்துக்கு  ‘சிவம் பஜே’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.இதில்,அஸ்வின் பாபுவுடன்  அர்பாஸ் கான், திகங்கனா சூர்யவன்ஷி, ஹைப்பர் ஆதி, முரளி ஷர்மா, சாய் தீனா, பிரம்மாஜி, துளசி, தேவி பிரசாத், ஐயப்ப சர்மா, ஷகலகா சங்கர், காஷி விஸ்வநாத், இனயா சுல்தானா உள்பட  பலர்.நடித்துள்ளனர்
இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது, அஸ்வின் பாபு கவனம் ஈர்க்கும் விதத்தில் இடம்பெறும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இப்படம் குறித்து . இயக்குநர் அப்சர் கூறுகையில், ‘சிவம் பஜே’ என்ற தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர் மகேஸ்வர ரெட்டி ஆகியோரின் அமோக ஆதரவால் நான் எதிர்பார்த்ததை விட சிறந்த அவுட்புட் கிடைத்துள்ளது. டீசர் மற்றும் பாடல்கள் வெளியீடு குறித்த கூடுதல் விவரங்களை விரைவில் தருவோம்” என்கிறார்.