‘நீலோற்பம் நீரில் இல்லை’..நாளை வெளியாகும் ‘இந்தியன் 2’ இரண்டாவது பாடல்!

 

கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன்-2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது இப்படத்தில் கமலுடன்,காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்மா, எஸ்.ஜே. சூர்யா மறைந்த நடிகர்களான நெடுமுடி வேணு மற்றும் விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் ஆன “பாரா” என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரு வாரியான வரவேற்பை பெற்றது..

இந்நிலையில்,இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான “நீலோற்பம் நீரில் இல்லை” பாடல் நாளை வெளியாகிறது.

இதையொட்டி தற்போது இப்பாடலின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங்குக்கான காதல் பாடலாக இந்த பாடல் உருவாகி உள்ள நிலையில், நாளை காலை 11 மணிக்கு முழு பாடல் வெளியாகிறது.