நடிகர் காக்கா கோபால்,தமிழில் ஜீவாவின் ‘ஆசை ஆசையாய்’ ,மாதவன் நடிப்பில் வெளியான ‘ரன்’ உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளவர் காக்கா கோபால்,’ரன்’ படத்தில் விவேக்குடன் இவர் நடித்த காக்கா பிரியாணி நகைச்சுவைக் காட்சி இவரை தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வம் காட்டி வரும் காக்கா கோபால் தனது முக நூல் பக்கத்தில் ” நான் தற்கொலை பண்ணிக்க போகிறேன் என் சாவுக்கு என் மனைவியே முக்கிய காரணம் அதன் பிறகு என் மாமியார்,,மச்சான் அந்த குடும்பம் என்றும் ,மற்றொரு பதிவில்,என் நண்பர்களை பிரிவதற்கு நான் மிகவும் வருந்துகிறேன் மன்னிக்கவும் என்றும் பதிவிட்டுள்ளார் .
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த முகநூலை பதிவை அடுத்து அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது இரண்டு செல்போன்களும் ஸ்விட்ச் செய்யப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இப்பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.