நடிகர் ரஜினிகாந்த் திடீர் இமயமலை பயணம்! இன்று காலை புறப்பட்டுச் சென்றார்!!
நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு முடிந்து கடந்த 16 ம் தேதி ஓய்வுக்காக அபுதாபி சென்றார். அங்கு அவரை கவுரவிக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்ட நிலையில், அதை பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த், இதற்கு காரணமானவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.இதையடுத்து 11 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் நேற்று அதிகாலை அபுதாபியிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
இதையடுத்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது . இந்நிலையில் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சிறுவயதிலிருந்தே ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்ட ரஜினிகாந்த் ராகவேந்திரா மீது பற்றுக் கொண்டவர் அதன் காரணமாகவே தனது திருமண மண்டபத்துக்கு ராகவேந்திரா மண்டபம் என பெயர் சூட்டினார். அதன் பின்னர் இமயமலைக்கு செல்ல ஆரம்பித்த நிலையில், பாபாஜியை தனது குருவாக ஏற்றுக் கொண்டார்.
‘பாபா’ திரைப்படம் வெளியான காலகட்டத்தில் இருந்து தொடர்ந்து 21 ஆண்டுகளாக இமயமலைக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ள ரஜினி, ‘‘இங்கு வரும்போதெல்லாம் எனக்கு தனி சக்தி கிடைக்கிறது. என்றும் கூறியிருந்தார் .இந்நிலையில் திடீரென .கொரோனா தொற்று கடந்த சில ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இமயமலைக்கு செல்வதை தவிர்த்து வந்த நிலையில் மீண்டும் கடந்த ஆண்டு ‘ஜெயிலர்’ பட வெளியீட்டுக்கு முன்னதாக இமயமலை பயணம் மேற்கொண்டார்
இந்நிலையில் ஜெயிலர் படத்தைப் போலவே ‘வேட்டையன்’ படத்திலும் மல்டி ஸ்டார் உள்ளதால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்: வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். 73 வயதிலும் அதிரடியாக ஆக்சன் செய்து நடித்து வரும் ரஜினிகாந்த் அந்த படம் தொடங்குவதற்கு முன்னதாக இமயமலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ரஜினிகாந்த் இன்று காலை இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்,
முன்னதாக போயஸ் கார்டனிலிருந்து தனது காரில் விமான நிலையம் சென்றார் அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,” அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,” ஒவ்வொரு வருடமும் நான் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளேன்.
இந்த வருடமும் இமயமலைக்கு செல்கிறேன்.அங்கு பத்ரிநாத் கேதர் நாத செல்ல உள்ளேன்.இமயமலை பயணம் எனக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளது.ஒவ்வொரு முறையும் புதிய அனுபவம் கிடைப்பதால் இமயமலைக்கு செல்கிறேன் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே ஆன்மீகம் தேவைப்படுகிறது. வேட்டையன் படம் சிறப்பாக வந்துள்ளது
. ஆன்மிக பயணத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார். மேலும் மீண்டும் மோடி வெற்றிபெறுவார் என்று நினைக்கிறீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ரஜினிகாந்த் , “மன்னிக்கவும், அரசியல் கேள்வி வேண்டாம்” வேண்டாம் என்றும் பதிலளித்தார்
தொடர்ந்து இசை பெரியதா அல்லது கவிதை பெரியதா என ஒரு போட்டி தமிழ் சினிமாவில் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, “நோ கமெண்ட்ஸ்” என்று மட்டும் கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்று விட்டார் .