ஆகஸ்ட் 15-ல் ‘தங்கலான்’,பாலாவின் வணங்கான் மோதலா?

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘தங்கலான்’. இப்படத்தில்  பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள இப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் வெளியீட்டு தேதி சில காரணங்களால் தள்ளிபோடப்பட்டு கொண்டே வந்த நிலையில்,கடைசியாக  வரும்  ஜூன் 20-ம்தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது.இந்நிலையில் இப்படம் தற்போது வரும் ஆகஸ்ட்  .15-ம் தேதி சுதந்திர தினத்தன்று  வெளியாகும்  என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதைப் படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதே சமயம் இதே தேதியில்  பாலா இயக்கத்தில் தற்போது அருண் விஜய் ஹீரோவாக நடித்து தயாராகி இருக்கும் ‘வணங்கான்’ திரைப்படமும், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா 2’ படமும் திரைக்கு வரவுள்ளது என்கிறார்கள்.இதனால் ஒரே நாளில் 3 படங்கள் மோதலுக்கு தயாராகி வருகிறது.