நடிகர் விஜய், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்த்தில் அவருடன் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, வைபவ், மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் ,
மேலும், டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளா, சென்னை, ஐதராபாத்,மாஸ்கோ ஆகிய இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது, இலங்கையில் இறுதியாக மைக் மோகன் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,இப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக படக்குழுவினர் ஏ.ஐ AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர். இதற்காக விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாம்..இப்படத்தில் விஜயகாந்த் நடித்துள்ள காட்சி மொத்தம் 1.30 நிமிடங்கள் என்றும், இந்த காட்சி படத்தின் ப்ரீகிளைமாக்ஸ் காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது விஜயகாந்த் ரசிகர்களை ரொம்பவே உற்சாகமடைய வைத்துள்ளது