உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில்,மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப். படத்தில் திரிஷா, சிம்பு, அபிராமி, அசோக் செல்வன், இந்தி நடிகர் அலிஃபஸல், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்துள்ள நிலையில் சமீபத்தில் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்றில்,தமிழில் ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்த போது விபத்தில் சிக்கியுள்ளார் அதாவது ஹெலிகாப்டர் ஒன்றில் இருந்து குதிக்கும் காட்சியில் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய நடிகர் ஜோஜு ஜார்ஜூக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன