சிவகார்த்திகேயன் படத்தில் விஜய்யின் உறவினர்!

நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் இது அவரது  21-வது படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை .கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.. இதில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்

 இப்படத்தை தொடர்ந்து  சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இப் படம் சிவகார்த்திகேயனுக்கும், எப்படியாவது மீண்டும் ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட  வேண்டும்  என்ற முனைப்புடன் இருக்கும் முருகதாஸுக்கும் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்

இந்நிலையில் இப படத்தில் சிவகார்த்திகேயனின்  கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.அதாவது கஜினி சூர்யா கதாபாத்திரத்திற்கு நிகராக அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இதில் சிவகார்த்திகேயன் மனநலம் குன்றிய கதாபாத்திரத்தில்  நடிப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர்  விஜயின் உறவினர் நடிகர் விக்ராந்த் இணைந்துள்ளதாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.