’மபொசி’ படத்தலைப்பு மாறியது!

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் ’விடுதலை 2’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.  விரைவில் முடிவடையவுள்ள இப்படத்தை தொடர்ந்து, சூர்யா நடிக்கவுள்ள  ’வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார்.இந்நிலையில்,படதயாரிப்பிலும் இறங்கியுள்ள அவர், கவின் நடிக்கும் ’மாஸ்க்’, விமல் நடிப்பில், போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும்   ’மபொசி’. உள்ளிட்ட படங்களை தயாரித்தும் வருகிறார். மேலும்  விமல் மற்றும் சாயாதேவி நாயகன், நாயகியாக நடித்து வரும்  இப்படத்தின் டைட்டிலான ’மபொசி’ என்பது ’மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ என்பதன் சுருக்கம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  ’மபொசி’ என்ற இப்படத்தின் தலைப்பு   ’சார்’  என மாற்றி  வைக்கப்பட்டு, புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.