நெப்போலியன் மகனுக்கு ஜப்பானில் திருமணம்! பிரமாண்ட ஏற்பாடு !!

சினிமாவில் புதுநெலு புது நாத்து படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த நெப்போலியன் அரசியலிலும் ஈடுபட்டு மத்திய அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். ஆனால் தன்னுடைய மகனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். அவ்வப்போது திரைப்படங்களில் நடிப்பதற்காக் சென்னை வந்து செல்கிறார் இந்நிலையில் 25 வயதாகும் தன்னுடைய மூத்த மகன் தனுசுக்கு,நெல்லை மூலக்கரைப்பட்டியை அக்சயாவை திருமணம் செய்ய இருக்கிறார்.இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது.இந்நிலையில் தனுஷ்,அக்சயா ஆகியோரது திருமணம் ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் வரும் நவம்பர் 7 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக  நடக்க உள்ளது இந்நிலையில் நடிகர் நெப்போலியன் தனது மகன் திருமண அழைப்பிதழை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் இந்தியத் தூதர் டக்காஹசி மியூன்னோவை சந்தித்து வழங்கியுள்ளார் திருமணத்திற்காக கோலிவுட் பிரபலங்கள் பலரும் ஜப்பானுக்கு செல்லவுள்ளனர்