அழகான காதல் கதையாக உருவான ‘முதல் காதல் மரியாதை’!
விஷன் மூவி மேக்கர்ஸ் சார்பில் தெலுங்கில் வெளியான “அலா நின்னு சேரி”என்ற படத்தை தமிழில்”முதல் காதல் மரியாதை என்ற பெயரில் சாய் சுதாகர் தயாரித்து உள்ளார். இதில் தினேஷ் தேஜ் கதாநாயகனாகவும் ஹெப்பா பட்டேல், பாயல் ராதாகிருஷ்ணா கதாநாயகியகளாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவை ஆண்ட்ரூ பாபு கவனிக்க, சுபாஷ் ஆனந்த் இசையமைத்துள்ளார் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள நரேஷ் சிவன் கூறியதாவது,”எல்லோருக்கும் முதல் காதல் வருவது உண்டு. அதை நாம் காதலிக்கும் பெண்ணிடம் கூற தைரியம் வருவதில்லை. அப்படி காதலிக்கும் பெண்ணை கடைசிவரை காதலித்து கைப்பிடிப்போமா என்றும் தெரியவில்லை. காதலித்த பெண்ணை நாம் திருமணம் செய்து கொண்டால் அதைவிட அதிர்ஷ்டம் வேறு இல்லை தான்.
காதலித்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய அவரின் தாயார் ஏற்பாடு செய்து விடுகிறார் இதை அறிந்த நாயகன் திருமண மண்டபத்திற்கு சென்று அங்கே புது மாப்பிள்ளை தாலியை கட்ட முற்படும்பொழுது அங்கிருந்து நாயகன் திரும்பி விடுகிறான். பின் நாயகன் துவண்டு விடாமல் தன் வாழ்க்கையின் லட்சியத்தை நோக்கி பயணிக்கிறான். கடைசியில் தன் காதலியை கரம் பிடித்தானா ? இல்லை லட்சியத்தை அடைந்தானா ? என்பது தான் இப்படத்தின் சுவாரசியமான அழகான காதல் கதையாகி உள்ளது ” என்கிறார் இயக்குனர் நரேஷ் சிவன்