முடிந்தால் தடுத்து பாருங்க ! தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் விஷால் சவால்!!

கடந்த 2017 – 19 காலகட்டத்தில் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது சங்கத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியதால் 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என பல முறை கேட்டும் விஷால் பதில் அளிக்கவில்லை. அதனால் ஏற்கனவே செயற்குழுவில் எடுத்த முடிவில் அடிப்படையில் விஷாலை வைத்து படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தோலோசித்துவிட்டு பணிகளை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தமிழ்த் திரைப்பட  தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.  இது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தினர் தனக்கு ரெட் கார்டு போடப்பட்டு இருப்பதற்கு நடிகர் விஷால் தனது இன்ஸ்டாகி ராமில் பதிலடி கொடுத்துள்ளார் அதில் நடிகர்  விஷால் கூறியுள்ளதாவது,”அது எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு என உங்களுக்கு தெரியாதா. அதில் உங்களுடன் தற்போது இருக்கும் கதிரேசனும் இருந்தார். மூத்த/நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ தான் அந்த நிதி பயன்படுத்தப்பட்டது. உங்க வேலையை ஒழுங்காக செய்யுங்க. சினிமா துறைக்கு நிறைய தேவை இருக்கிறது. இரட்டை வரிவிதிப்பு, தியேட்டர் நிர்வாக கட்டணம் என இன்னும் பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டி இருக்கிறது. விஷால் தொடர்ந்து படம் நடிப்பார். முடிந்தால் தடுத்து பாருங்க” என விஷால் பதிவிட்டு இருக்கிறார்.  நடிகர் விஷால், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர்  இடையேயான மோதல் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.