சிங்க\ங்களுக்காக மகன்களுடன் குரல் கொடுத்த ஷாருக்கான் !

‘தி லயன் கிங்’ படத்தின் இரண்டாம் பாகத்தை டிஸ்னி நிறுவனம் உருவாக்கியுள்ளது.‘முஃபாஸா: தி லயன் கிங்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இபடத்தின்  முதல் பாகத்தில் இறந்து போனதாக காட்டப்பட்ட முஃபாஸா சிங்கத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.  பேர்ரி ஜெர்க்கின்ஸ் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் இப்படக்குழு  வெளியிட்டது. இப்படம் வரும் டிசம்பரில் தமிழ், தெலுங்கு,இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.இப்படத்தின் முதல் பாகத்தின் டப்பிங்குக்காக அந்தந்த மொழிகளில் இருக்கும் பிரபலமான நடிகர்களை இப்படக்குழு பயன்படுத்தியிருந்தது. அதன்படி இந்தியில் ஷாருக்கானும், அவரது மகன் ஆர்யன் கானும் டப்பிங் செய்திருந்தனர். அதே போல தமிழில் அரவிந்த்சாமி மற்றும் சித்தார்த் குரல் கொடுத்திருந்தனர்.இந்நிலையில், தற்போது ‘முஃபாஸா: தி லயன் கிங்’ படத்தின் இந்தி பதிப்புக்கு மீண்டும் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மகன்களான ஆர்யன் கான்,ஆப்ரம் கான்ஆகியோர் இணைந்து டப்பிங்  பேசியுள்ளனர்

இப்படம் குறித்து ஷாருக்கான் கூறுகையில், “முஃபாசா ஒரு ஒப்பு உயர்வில்லாத மரபு மற்றும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.காட்டின் ராஜா, முஃபாசா,, தனது ஞானத்தை அவரது மகன் சிம்பாவுக்கு வழங்குகிறார். நான் அவருடன் ஆழமாக தொடர்பு கொள்கிறேன்
முஸாபா வின் இளமை காலம் தொட்டு காட்டு ராஜா வாக உருவாகி சாதனைகள் புரியும் காலம் வரை அந்த கதாபாத்திரத்தை குரல் வடிவாக வழங்கியது அருமையானதொரு அனுபவம் ! எனது மகன்களும் இப்பணியில் பங்கேற்றது மேலும் மெருகேற்றியது! டிஸ்னியுடன் இது எனக்கு ஒரு சிறப்பு ஒருங்கிணைப்பு!, குறிப்பாக என் மகன்கள் ஆர்யன் மற்றும் ஆப்ராம், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக உள்ளனர், இந்த அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக இருக்கிறது.”
“உன்னதமான முஃபாசா ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்பதை விட, அவர் தொடர்ந்து செயல்படும் ஒரு அவதார நாயகனாக வலம் வருகிறார்.
தலைமுறைகள் பாராட்டும் கதைகளை உருவாக்கி ஊக்குவிக்கும் டிஸ்னி நிறுவனத்தின் புதியதொரு பிரம்மாண்டமான படைப்பு தான் , இப்படம் என்கிறார்