நடிகை மேகா ஆகாசுக்கு திருமண நிச்சயதார்த்தம் !
தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். தொடர்ந்து கதாநாயகியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ பூமராங் , ஒரு பக்க கதை, சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மேகா ஆகாஷ். தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாய் விஷ்ணுவை திருமணம் செய்ய உள்ளார். அவர்களின் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நேற்று கேரளாவில் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.
இந்நிகழ்வில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இது குறித்த புகைப்படங்களை நடிகை மேகா ஆகாஷ் தனது சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை மேகா ஆகாஷின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.