எமி ஜாக்சன் 2 வது திருமணம்! இயக்குநர் விஜய் நேரில் வாழ்த்து!!
தமிழில் ‘மதராசபட்டினம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை எமிஜாக்சன், கடந்த 2015ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. அதற்கு பிறகு எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வந்த எமி; அவருடன் சில வருடங்கள் ‘லிவிங் டூ கெதரில்’ இருந்து வந்தார் . கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர்.இந்நிலையில்,இந்நிலையில் எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடந்து முடிந்துள்ளது.. இது குறித்த அறிவிப்பை எட் வெஸ்ட்விக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார் இந்தத் திருமணத்தில் இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்.

இதுதொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தி, ‘அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ எனத் தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.