அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை! -நிவின்பாலி!
கேரளாவில் நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவிடம் பல பெண்கள் பல சினிமா பிரபலங்கள் மீது வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர் . ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் எந்தவொரு ஆதாரமும் இல்லை என சினிமா பிரபலங்களும் மறுத்து வரும் நிலையில், தற்போது நடிகர் நிவின் பாலி மீதும் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு ஒன்று பாய்ந்துள்ளது.
நேரம், பிரேமம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது கேரள இளம்பெண் ஒருவர் பலாத்கார புகார் அளித்த நிலையில், அதற்கு நிவின் பாலி, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தேன் எனக் கூறுவதில் துளி அளவும் உண்மை இல்லை என அதிரடியாக மறுத்துள்ள நிவின் பாலி. ‘இந்த புகார் ஆதாரமற்றவை என நிரூபிக்க நான் எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் ,. தன்னை பற்றி அவதூறு பரப்பியவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என ஏகத்துக்கும் கொந்தளித்துள்ளார்