நடிகர் ராணா தயாரிப்பில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி !

நடிகர் ராணாவின் ‘ஸ்பிரிட் மீடியா’ மற்றும் நடிகர் துல்கரின் ‘வேஃபேரர்’ இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது.தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் ‘காந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்கிறது படக்குழு. இப்படத்தில், துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் கூறுகையில்,, “ஸ்பிரிட் மீடியாவுடன் இந்த அற்புதமான பயணத்தை ‘காந்தா’வுடன் தொடங்குவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது மனித உணர்வுகளின் ஆழத்தைப் படம் பிடித்து காட்டும் ஒரு அழகான கதை. நடிப்புத் திறனை வெளிக்காட்ட இந்தப் படம் நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு” என்றார்.நடிகர்- தயாரிப்பாளர் ராணா டகுபதி கூறியுள்ளதாவது,, “’காந்தா’வுக்காக வேஃபேரர் ஃபிலிம்ஸுடன் இணைந்திருப்பது இந்தத் படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் சிறந்த படமாக ‘காந்தா’ இருக்கும்” என்றார்.