மஞ்சு வாரியருடன் ரஜினிகாந்த் போட்ட ஆட்டம்! ‘வேட்டையன்’ மனசிலாயோ’ பாடல் வெளியானது!
நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக ‘வேட்டையன்’ உருவாகியுள்ளது. ஜெய் பீம் இயக்குனர் த சே. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், பகத் ஃபாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா உள்ளிட்டவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை வெளியாகியுள்ளது. . லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ள மனிசிலாயோ பாடலில் ரஜினிகாந்துடன் மஞ்சு வாரியர், அனிருத் உள்ளிட்டவர்களும் ஆட்டம் போட்டுள்ளனர். இந்தப் பாடலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மலேசியா வாசுதேவன் ரஜினிக்காக பாடியுள்ளார்.
இப்பாடல் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு இடவன் ஆகியோர் இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதியுள்ள நிலையில், மலேசியா வாசுதேவன் குரலுடன் யுகேந்திரன், அனிருத், தீப்தி சுரேஷ் ஆகியோரும் இந்தப் பாடலை பாடியுள்ளனர். சமூக வலைத்தளங்களால் இப்படல் பெரும் வைரலாகி வருகிறது.கிட்டத்தட்ட 27ஆண்டுகளுக்கு பின் ரஜினிக்காக ஏ ஐ தொழில் நுடபத்தின் உதவியுடன் மலேசிய வாசுதேவன் குரல் பயன் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது