பாலியல் புகாரில் பிரபல நடன இயக்குனர் அதிரடி கைது !

விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’, ‘வாரிசு’ உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா. இவர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக அவரிடம் பல படங்களுக்கு உதவியாளராக பணியாற்றி வந்த இளம் நடனக் கலைஞர் கொடுத்த புகார், ஒட்டுமொத்த திரை உலகையும் உலுக்கியது. குறிப்பாக தான் மைனராக இருந்தபோதே அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, தற்போது 21 வயதை எட்டியுள்ள பெண் நடனக் கலைஞர் தனது புகாரில் தெரிவித்திருந்தது தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது இதையடுத்து ராய்துர்காம் காவல் நிலையத்தில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு போக்சோ வழக்காக பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் அவரை பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டது .தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் அவர் திரைப்படங்களில் பணியாற்ற தடை விதித்தது.ஏற்கனவே கமிட்  ஆகியிருந்த படங்களிலிருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து , ஜானி மாஸ்டர் தலைமறைவாக இருந்தார். அவரை  ஐதராபாத் போலீஸ் பல இடங்களில் வலைவீசி தேடி வந்தது. அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், ஜானி மாஸ்டர் தலைமறைவானது உறுதியானது. இந்நிலையில் பெங்களூரில் பதுங்கி இருந்த  ஜானி மாஸ்டரை  ஐதராபாத் தனிப்  படைபோலீசார்  இன்று காலை  கைது செய்துள்ளனர்.