போதை ஏறி புத்தி மாறி”,”டபுள் டக்கர்” உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, நடிகர் தீராஜ் “பிள்ளையார் சுழி” படத்தில் நடித்து வருகிறார்.மனோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகன் தீராஜுடன், நடிகை அபிநயா இணைந்து நடித்துள்ளார்.இவர்களுடன் ரேவதி, மைம் கோபி, மத்தியு வர்கீஸ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தர்ஷன், ஜீவா ரவி, பழனி தேவி, ஆர்ஜே மகாலட்சுமி போன்ற முக்கிய துணை நடிகர்கள் நடிக்கின்றனர். குழந்தை நட்சத்திரங்கள் உண்ணி கிருஷ்ணன், ஆர்னா, ஃபர்ஹானா, மற்றும் ஸ்ரீ ஷரவண் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்,இப்படத்தின் ஒளிப்பதிவை பிரசாத் கவனிக்க, ஹரி எஸ்.ஆர். இசையமைத்துள்ளார். சிலம்பரசி வி தயாரிப்பில், எயர் ஃப்ளிக்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் குறித்து அப்படத்தின் நாயகன் தீராஜ் கூறுகையில், ” இது சென்னையில் நடக்கும் கதை தாய் தந்தை இருவரும் ஐடி துறையில் பணியாற்றி வருபவர்கள். அவர்களுக்கு ஒரு மன வளர்ச்சி குன்றிய குழந்தை. அந்த குழந்தையின் யின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான,அதே சமயம் பக்கா கமர்சியல் படமாகவும் உருவாக்கி இருக்கிறோம். அந்த குழந்தையை வைத்துக்கொண்டு அவர்கள் படும் சிரமங்களையும்,துயரங்களையும். சமூகத்தில் இத்தகைய குழந்தைகளின் இன்றைய நிலைமை. அவர்கள் மற்றவர்களால் எவ்வளவு தூரம் புறந்தள்ளப்பட்டுள்ளனர். அந்த குழந்தையை பெற்ற பெற்றோர்களின் நிலை என்ன?என்பதையும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளையும் இப்படம். அலசுகிறது.இப்படத்தில் நடிகை ரேவதி திருப்பு முனை கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் பேசப்படும்.இதில் மனவளர்ச்சி குன்றிய 6 வயது சிறுவனை அவர்களின் தாய் தந்தை உதவியுடன் நடிக்க வைத்துள்ளோம். ஆச்சரிய படும் அளவுக்கு நடித்து இருக்கிறான். இந்த படத்தை பார்ப்பவர்களின் மனநிலை, கருத்து நிச்சயமாய் மாறுபடும். இப்படம் நியூயார்க் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார்.