விவாகரத்து ‘விவகாரம்’ நடந்தது என்ன? மனம் திறந்த  ஜெயம் ரவி!

ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து விவகாரம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில்  பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இது குறித்து  நடிகர் ஜெயம் ரவி முதல் முறையாக மனம் திறந்துள்ளார் அவர் கூறியுள்ளதாவது, “என் மனைவி விவாகரத்து தொடர்பாக சொல்லி இருக்கும் கருத்து தவறானது. அவருக்குத் தெரியாமல் இது நடக்கவில்லை. நான், சமூக வலைத்தளத்தில் அறிவிப்பதற்கு முன்பே இரண்டு முறை ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தேன். ஆர்த்தியின் அப்பா என்னை வந்து சந்தித்து பேசினார் அதற்கு பிறகு தான் சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை முறைப்படி வெளியிட்டேன். என் அப்பா, அம்மாவை பொறுத்தவரை எந்த முடிவு எடுத்தாலும் நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களது ஆசை. இந்த விஷயத்திலும் அவர்கள் அப்படி தான் நினைக்கிறார்கள். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.அதில் பெரிய  மகன் சற்று விபரம் தெரிந்தவன்  என்பதால்  நான் ஏற்கனவே அவனிடம் விவாகரத்து குறித்து பேசினேன். ஆனாலும் அவனுக்கு நாங்கள்  பிரிவதில் விருப்பம் இல்லை. ஆனால்இந்த விஷயத்தில் வேறு எதுவும் செய்ய முடியது. மனதளவில் மிகவும் நொறுங்கி போய் இருக்கிறேன். அதனால் தான் கொஞ்ச நாள் வெளிமாநிலம் சென்று இருந்தேன்   சில கசப்பான அனுபவங்கள் காரணமாக மிகவும் யோசித்தே  நான் ஆர்த்தியை பிரிய முடிவு எடுத்தேன். .இதனால் நான் எனது மகன்களை என்றைக்கும் கைவிடும் எண்ணம் இல்லை. சமீபத்தில் கூட எனது மகனின் பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்தே கொண்டாடினோம்.நேற்றுகூடஅவர்கள்  என்னுடன் தான் இருந்தார்கள்.   அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நீதிமன்றம் பார்த்து கொள்ளும்.  அப்போது  என்ன நடந்தது  பல உண்மைகளும் தெரியவரும். பாடகி கெனிஷாவுடன் தொடர்பு படுத்தி என்னை பேசுவதை ஏற்று கொள்ள முடியவில்லை. ” என்றார்.