வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்தவர் மிர்ச்சி சிவா!- வாகை சந்திரசேகர் .
திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோர் இணைந்து சூது கவ்வும் படத்தின் 2 ம் பாகத்தை தயாரித்துள்ளனர். எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கத்தில்உருவாகியுள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க,வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதா ரவி, எம் எஸ்பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் – ஹரி இணைந்து இசையமைத்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் வாகை சந்திரசேகர் பேசுகையில்,”திரையுலகத்திற்கு வந்து 45 ஆண்டுகள் ஆகிறது.இந்தப் படத்தில் இந்த தலைமுறை நடிகரான சிவாவுடனும், எங்கள் தலைமுறை நடிகர்களான ராதாரவி- எம்.எஸ். பாஸ்கர் உடனும் நடித்திருக்கிறேன். நான் அரசியல்கட்சி ஒன்றில் இருந்தாலும், அரசியலில் இருந்தாலும், அரசு பதவியில் இருந்தாலும் இன்றும் நான் ஒரு கலைஞராகவே இருக்கிறேன். ஊரிலிருந்து சென்னைக்கு ஓடி வந்தது நடிகனாக வேண்டும்என்றுதான். இன்று வரை அதற்கான வாய்ப்பு கிடைத்து வருவதில் மகிழ்ச்சி. இப்படத்தை இயக்கியுள்ள அர்ஜுன் ஒரு அற்புதமான இயக்குநர். படப்பிடிப்பு தளத்தில் எந்தவித பதட்டமும் இல்லாமல் இயல்பாக காட்சிகளை விளக்கி எங்களிடமிருந்து நடிப்பை வாங்கினார். அவருக்கு ஒளிப்பதிவாளர் பக்க பலமாக இருந்தார். இந்தப் படத்தை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை. ஆனாலும் டப்பிங் பேசும்போது என் கேரக்டர் நன்றாக இருந்தது. இதில் நல்ல அரசியால்வாதி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். மிர்ச்சி சிவா மிகப்பெரிய புத்திசாலி. வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்தவர். வாழ்க்கையில் போராட்டத்தை உணர்ந்தவர். அவரிடமிருந்தும் சில விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.இந்த படத்தை தொடர்ந்து இந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களிலும் இந்த இயக்குநர் இயக்கும் படங்களிலும் நான் இருப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக காத்திருக்கிறேன்”.இவ்வாறு அவர் பேசினார்