தனுஷுடன் ஜோடி சேரும் பிரபல ஹாலிவுட் நடிகை!


நடிகர் தனுஷ் தற்போது நடிப்பில் மட்டுமில்லாமல், இயக்கத்திலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ‘ராயன்’ படத்தை தொடர்ந்து, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’, ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.மேலும் தேசிய விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ குபேரா ‘படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார்.இப்படத்தில் தனுசுடன் . நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ், ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட்டில், ‘தி கிரே மேன் ‘ என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு ‘ஹாலிவுட்’ படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி நடிக்கஉள்ளதாகவும் கூறப்படுகிறது.