நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்: கோவாவில் இன்று காலை நடந்தது!

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி.இவர் நடிகை மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது கீர்த்தி சுரேஷ் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஆண்டனி என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது . ஆண்டனி கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும், துபாயில் வசித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ் இந்து மதத்தை சேர்ந்தவர். அவரது காதலர் ஆண்டனி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். கடந்த 15 வருட காலமாக காதலித்து வந்த இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில், இவர்களது திருமணம் கோவாவில் இன்று காலை இந்து முறைப்படி நடந்தது. சரியாக காலை 9.40க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.இதை தொடர்ந்து இன்று மாலை கிறிஸ்தவ முறைப்படியும் நடக்க உள்ளது . திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி விரைவில் சென்னையில் நடக்க உள்ளது . இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்