நடிகர் பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை!
நடிகர்பிரபு கடந்த ஆண்டு பிப்ரவரி (20 –ஆம் தேதி) இரவு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக
சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ளமெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டா ர். அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்புஇருந்தது கண்டறியப்பட்டு,யூரித்ரோஸ்கோப்பி லேசர்
அறுவை சிகிச்சை மூலம் சிறு நீரகக் கற்கள் அகற்றப்பட்டு வீடு திரும்பினார்.இந்நிலையில், நடிகர் பிரபு காய்ச்சல் மற்றும் தலைவலி அறிகுறிகளுடன் கடந்த 3 ம் தேதி , மெட்வேமருத்துவமனையில் அனும-திக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், மூளையின் பெரும்பகுதிக்கு ரத்தத்தைவழங்கும் ஒரு பெரிய இரத்த நாளமான நடுத்தர பெருமூளைதமனியின் பிள-வுகளில் உள் கரோடிட் தமனியின் மேற்புறத்தில் வீக்கம் இருப்பது
சோதனையில் தெரியவந் தது.அதைத்தொடர்ந்து , நடிகர் பிரபுவுக்கு மூளை அனீரிசிம் அறுவை சிகிச்சை
செய்யப்பட்டது. தற்போது,அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று மாலை நடிகர் பிரபு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது