மே தினத்தை குறிவைக்கும் சூர்யாவின் ‘ரெட்ரோ’ !
கங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள புதிய படம்,’ரெட்ரோ’ இப்படத்தில் சூர்யாவுடன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா கவனிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.. அதன்படி இப்படம் வரும் மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில்,,அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானதால் மோதலை தவிர்க்கும் விதமாக மே 1ம் தேதியை ‘ரெட்ரோ’ படக்குழு தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.