அஜித்தின் ‘விடாமுயற்சி’ டிரைலர் வெளியானது!
பொங்கல் பண்டிகையையொட்டி அஜித்தின் விடா முயற்சி படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்த நிலையில், தற்போது விடா முயற்சி வரும் பிப்ரவரி 6-ந் தேதி வெளியாகும் என்ற அறிவிப்புடன் படத்தின் டிரெய்லர், வெளியாகியுள்ளது.
முதலில் ரொமான்ஸ் காட்சிகளுடன் தொடங்கிய இந்த டிரெய்லர், அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் முடிகிறது. விடாமுயற்சி படத்தின் டீசரைப் பார்த்த பலரும் ,மொத்தம் 2.21 நிமிடங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் ஹாலிவுட் தரத்தில் உள்ளதாக பாராட்டி வருகின்றனர்
இப்படத்தில், அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.