போலி அரசியல்வாதிகளை தோலுரிக்கும் ” பூ க ம் ப ம் “

ஐ இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கதை.திரைக்கதை வசனம் எழுதி டைரக்சன் செய்து தயாரித்து நாயகனாக  இஷாக் ஹுசைனி ” நடிக்கும் படம்தான் பூகம்பம்” .
 ஆக்சன் ஹீரோவாக  இஷாக்ஹுசைனி நடித்திருக்கிறார்.போலந்து நாட்டில் தொழிலதிபராக இருந்ததாலும்   தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மண்ணில் பிறந்தவர்.சில வெற்றி படங்களை தயாரித்தும் இருக்கிறார். தற்போது மிக பிரமாண்டமாக அதிக பொருட் செலவில் உருவாகும் “பூகம்பம்”படத்தில் போலி அரசியல்வாதி போர்வையில் உலவுபவர்களை தோலுரித்து காட்டியுள்ளார்.
 அரசியல்வாதி மக்கள் மத்தியில் எப்படி இருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள்.  கல்லூரி மாணவர்கள் நினைத்தால் அரசியலில் உள்ள உச்ச சிம்மாசனத்தை மாற்ற முடியும் என்ற நிலையை உருவாக்க முடியும் என்றும் இதில் கூறி  இருக்கிறார்.
 படத்தில் வரும் கிளைமேக்ஸ் காட்சியில் ஸ்டண்ட்  மாஸ்டர்கள் கமாண்டர் கே.பாபு  மற்றும் பொன்னேரி புயல் டாக்டர்.ஜோதி இவர்களுடன் இணைந்து தனக்கு தெரிந்த தற்காப்பு கலையையும் பயன்படுத்தி 20 ஸ்டண்ட் கலைஞர்களுடன் மோதும் சண்டைக் காட்சிகள் அனல் பறக்கும் வண்ணம் படமாக்கி இருக்கிறார்.  எதிரிகளால் உருவாக்கப்படும் கலவரத்தை  எப்படி அடக்கப் போகிறார் இஷாக்ஹுசைனி. ?
எதிரியை வீழ்த்த நண்பர்களுடன் போராடும்  கதை ஒருபுறம்.     மக்களுக்காக ஒரு நேர்மையான அரசியல்வாதியை சிம்மாசனத்தில் அமர வைக்க முயற்சி செய்வது மறுபுறம்.
இரண்டு  காதலிகளில் யாரை காதலிக்கப் போகிறார் என்பது  இன்னொருபுறம். அரசியல்வாதியிடம் கேள்வி கேட்கும் வசனத்தை தன்னுடைய பாணியில் எழுதி அசத்தியிருக்கிறார்.
வில்லனாக ரிஷத் N.M.இலியாஸ், மும்பை மல்கோத்ரா,.காதலிகளாக தில்ஷானா, ஹேமா ஆகியோருடன் புதுமுக நடிகர் நடிகை பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.போலந்து. ஜெர்மன்.ஆகிய நாடுகளிலும் சென்னை சுற்றுப் பகுதிகளிலும் தான் பிறந்த மதுரை மண்ணிலும் படப்பிடிப்பு நடத்தி அசத்தியிருக்கிறார்  இஷாக்ஹுசைனி .  விரைவில் அதிக திரையரங்குகளில் வெளிவர  தயாராகிக் கொண்டிருக்கிறது.
 இசை :-சதாசிவ ஜெயராமன். ஒளிப்பதிவு :-.தயாள் ஓஷோ