விடாமுயற்சி பட உரிமையை தட்டித்தூக்கிய ரெட் ஜெயண்ட் !
லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், விஜே ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக லைகா நிறுவனம் சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.