அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’ பட பாடல் !

‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நன்னா ” ஆகிய பான் இந்திய  படங்களுக்கு இசையமைத்து  முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வரும்  ஹேஷாம் அப்துல் வஹாப்  ‘ ஒன்ஸ்மோர் ‘ படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ இப்படத்தில் அர்ஜுன் தாஸ் , அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில்  ஹேஷாம் அப்துல் வஹாப்  இசையில்  இடம்பெற்ற ”வா கண்ணம்மா..’ எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது  இந்த பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத ,  ஹேஷாம் அப்துல் வஹாப் மற்றும்  உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.   தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் – பண்பாடு – இசை- திருக்குறளுடன் தொடங்கும்  இந்தப் பாடல் இதுவரை ஐந்தரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது  தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக கூடும் என படக்குழு தெரிவித்துள்ளது.