சினேகன்-கன்னிகா ஜோடிக்கு இரட்டை பெண் குழந்தை !

பாடலாசிரியர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பல திறமைகளை கொண்டவராக வலம் வரும் கவிஞர் சினேகன், நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களது திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.இதையடுத்து  கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை கன்னிகா கர்ப்பமாக இருக்கும்  செய்தியை இருவரும் கூட்டாக தங்களது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது இவர்களுக்கு அழகான இரட்டை பெண்  குழந்தைகள்  பிறந்து இருப்பதாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.அப்பதிவில் கவிஞர் சினேகன் “இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற ” என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது… தாயே எந்தன் மகளாகவும் .. மகளே எந்தன் தாயாகவும் … இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள் … இதயமும்,மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது … உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள் என பதிவிட்டுள்ளார். இப்பதிவை பார்த்த  சினேகன் கன்னிகா தம்பதிக்கு திரையுலகினர் மற்றும்  ரசிகர்கள்  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியுள்ள கமல்ஹாசனை விரைவில் குழந்தைகளுடன் சென்று வாழ்த்து பெற சினேகன் திட்டமிட்டுள்ளார்